Tuesday, August 26, 2008

என் பதிவுப்பட்டையை மேம்படுத்த உதவுங்கள்

நான் மென்பொருளாளன் அல்ல. ஆனாலும் ஒரு வழியாக பதிவிடத் தொடங்கி விட்டேன்.

ஆனால் என் பதிவுப்பட்டையில் கீழ்க்கண்டவற்றை இணைக்க முடியவில்லை.
1. லைவ் ஃபீட்.
2. யூசர்ஸ் ஆன்லைன்
3. ஹிட் கவுன்டர்

உதாரணமாக ஹிட் கவுன்டர் - ஐ இணைக்க ஒரு தளத்திற்குச் சென்றேன். எனக்கு ஒரு எச் டி எம் எல் கோடு கிடைத்தது. அதை எங்கு இணைப்பது எனத் தெரியவில்லை.

தயவு செய்து உதவுங்கள்.

Wednesday, August 20, 2008

தூக்கத்திலும் விழித்திரு

ஒவ்வொரு ப்ரொஃபெஷனுக்கும் ஒரு மோட்டோ (இதற்கான தமிழ் வார்த்தையும் தெரியவில்லை!!) இருக்கும்.

'ய யேஷு சுப்தேஷு ஜாக்ரதி' - என்பது சி. ஏ. இன்ஸ்டிடியூட் - இன் மோட்டோ.

இதன் பொருள் தூக்கத்திலும் விழித்திருப்பவன் என்பது ஆகும்.

அதாவது ஒரு சார்டர்ட் அக்கவுண்டன்டின் புலன்கள் எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகிறது.

(மேலும் பேசுவோம்)..

ஏன் கழுகு?

எனது ப்ரொபைலில் (இதற்கான தமிழ் வார்த்தை தெரியவில்லை), கழுகு படத்தை இணைத்துள்ளேன்.

ஒவ்வொரு ப்ரொஃபெஷனுக்கும் ஒரு சின்னம் இருக்கும்.

சி. ஏ. இன்ஸ்டிடியூட் - இன் சின்னம் கழுகு.
கழுகைப்போல் கூரிய பார்வை வேண்டும் என்பதே அடிப்படை.

கணக்கு வழக்கு

சக பதிவர் இரா. வசந்தகுமார் எனது காஞ்சித் தலைவன் பதிவில் பின்னூட்டமிடுகையில் இந்த யோசனையைத் தெரிவித்தார்.
உடனே இந்தப் பதிவைத் துவக்கி விட்டேன்.

இதில் கணக்கு சம்பந்தமான பதிவுகளை இடலாம் என்று எண்ணியுள்ளேன்.

தங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.