Saturday, July 18, 2009

ஒரு சின்ன கணக்கு

இரண்டு நகரங்கள். சென்னை கோயம்புத்தூர் என்று வைத்துக்கொள்வோம்.

இரண்டுக்கும் இடையே தூரம் 500 கி.மீக்கள்.

சென்னையிலிருந்து கோவைக்கு ஒரு ரயிலும், கோவையிலிருந்து சென்னைக்கு ஒரு ரயிலும், ஒரே நேரத்தில் புறப்படுகின்றன. அவை சரியாக மணிக்கு 50 கி.மீ வேகத்தில் எதிர் எதிர் திசையில் (தனித்தனி தண்டவாளத்தில் வந்து கொண்டிருக்கின்றன)

சென்னையிலிருந்து புறப்பட்ட ரயிலின் இஞ்சின் மேல அமர்ந்திருந்த ஒரு ஈ, அதே ரயில் பாதையில் கோவை நோக்கி சரியாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பறக்கிறது.

எதிரே கோவையிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலை டச் செய்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி அதே மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பறந்து வருகிறது.

இப்போது சென்னையிலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருக்கும் ரயிலை டச் செய்து விட்டு மீண்டும் கோவை நோக்கிப் பறக்கிறது.

இவ்வாறு மேலும் கீழும் ரயில்களை டச் செய்து கொண்டே பறந்து விட்டு, இறுதியாக இரண்டு ரயிலும் ஒரு இடத்தில் மீட் செய்யும் அல்லவா?

அந்த இடத்தில் அது விழுந்து விடுகிறது.


கேள்வி:-

1. அந்த ஈ மொத்தம் எத்தனை மணி நேரம் பறந்திருக்கும்?

2. எத்தனை தூரம் பறந்திருக்கும்?




(என்ன கேள்வி சிம்பிளா இருக்கா??? )